தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய நிதியமைச்சரின் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுத்துறை வங்கியின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் மேலாண் இயக்குனர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் தகுதியான நிறுவனத்துக்கு கடன் வழங்குவதற்கான வங்கிகளுக்கு மத்திய அரசு 100 விழுக்காடு உத்தரவாதம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி போன்றவரை குறித்து கவலை இல்லாமல், அச்சம் கொள்ளாமல் கடன் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தால் அதற்காக வங்கி மற்றும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ளார்.