தமிழக கவர்னர் ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று ஆளுநர் ரவி சென்னை தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது நோக்கம் நிறைவேற உள்ளதா? என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம், இது குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கவர்னர் ரவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.