உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது.
தற்போது மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று கூட தெரியவில்லை. இந்த செய்தி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் உள்ள செவிலியர்கள் மற்றும் ஒரிசாவை சேர்ந்த செவிலியர்கள் ராஜினாமா செய்ய உள்ளனர் என கூறப்படுகிறது.