அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து ஐந்து முறை சரிந்துள்ளது.
நேற்று வரை இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.61 காசுகளாக சரிந்தது. இன்று மேலும் 12 காசுகள் சரிந்து தற்போது ரூ.77.73 ஆக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவை கண்டு வருகிறது. இதே போல பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் விதிகம் 7.79% ஆக பதிவானது. இது கடந்த மார்ச் மாதத்தை விட 0.84% அதிகமாகும்.
அடுத்த வாரம் டோக்கியோவில் குவாட் நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து ஜோ பைடன் -மோடி சந்திப்பு நடைபெறும் என்றும் இந்த சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் மட்டுமின்றி ஜப்பான் பிரதமர் உட்பட மேலும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றும் கூறப்படுகிறது.