பிரதமர் மோடி திமுகவை இனி தமிழகத்தில் பார்க்க முடியாது என நெல்லையில் ஆவேசமாக பேசியுள்ளார்.
நேற்று பல்லடம் பகுதியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த மோடி பேசினார். அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது “இனி திமுகவை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு எந்த வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை தடுக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடிக்கவே வளர்ச்சி திட்டங்களை தடுக்கிறார்கள். இந்த அரசை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. திமுக போய் வேஷம் போடுகிறது, திமுக பிரித்தாலும் சூழ்ச்சி செய்கிறது, இனி திமுகவை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்துவிட்டார்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.