அம்பையில் மகளிர் கலைகல்லூரி அமைக்க உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

Filed under: தமிழகம் |

அம்பையில் மகளிர் கலைகல்லூரி அமைக்க உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மகளிருக்கென என தனியாக கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை இருந்தது.

அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி கோரிக்கை மனுவினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் R.S.ராஜ கண்ணப்பன் அவர்களிடம் தலைமைச் செயற்குழு உறுப்பினரும்  அம்பாசமுத்திரம் நகர மன்ற தலைவருமான KKC பிரபாகரபாண்டியன் அவர்கள் வழங்கினார்.  மேலும் அந்தக் கல்லூரி அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அமைத்து தர வேண்டுமென்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.