இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு

Filed under: இந்தியா |

கடந்த 24 மணி நேரத்தில் இமாசல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக அங்கு கனமழை பெய்து வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி பல உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இமாசல பிரேதேசம் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரியில் பலியானவர்களில் 14 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலரது உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது. தற்போது பத்ரிநாத், கேதார் நாத் ஆகிய கோயில்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் நிலச்சரிவால் சேதமடைந்துள்ளதால், ஆன்மீக யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், யமுனை நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால், அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.