சீனாவின் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் 3 லட்சத்து 60 ஆயிரத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இமாசல பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாசல பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை 595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 376 பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.