இந்தியாவில் முதன் முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சலால் ஹைமானா என்ற பகுதியில் இந்தியாவில் முதல் முறையாக 5.9 மில்லியன் தான் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய சுரங்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொபைல் போன் பேட்டரிகள், எலக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரிகள் உள்ளிட்டவை தயாரிப்பதற்கு லித்தியம் மிகவும் முக்கியம் என்ற நிலையில் தற்போது இந்தியாவிலேயே 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் லித்தியம் உலோகத்தை இந்தியா இறக்குமதி செய்தது.