இலங்கை அதிபருக்கு கடும் எதிர்ப்பு

Filed under: உலகம் |

அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்த அவசர நிலை அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல வாரங்களாக நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களால் நெருக்கடி அதிகரித்து வருவதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே.

அதிபரின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை அமைப்புகள், வக்கீல் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் அரக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இலங்கையில் முற்றிலும் அமைதியான முறையிலும், வழக்கமான போலீசாரின் அதிகார வரம்புக்கு உட்பட்டும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த அவசர நிலை பிறப்பித்ததற்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்குமாறு அரசுக்கு மனித உரிமை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதைப்போல இலங்கை அவசர நிலை தொடர்பாக பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.