பிரேமலதா விஜயகாந்த் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் கூட்டணி என அறிவித்த நிலையில் அவரது ஆஃபரை யாரும் ஏற்க முன்வரவில்லை.
மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றும் ராஜ்யசபா தொகுதி குறித்து பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்றும் பாஜக தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் மூன்று தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தரலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு பிரேமலதா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோ அல்லது ராஜ்யசபா எம்பி மூலம் பாராளுமன்றத்துக்கு சென்றே தீர வேண்டும் என்று பிரேமலதா முடிவு செய்திருப்பதாகவும் அதிமுகவிடம் இருந்து ராஜ்யசபா தொகுதியை பெற்று பாஜகவிடம் மத்திய அமைச்சர் பதவியும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அதிமுக – தேமுதிக கூட்டணி முடிவு அடைந்து விட்டதாகவும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரேமலதா நேருக்கு நேர் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப்படுகிறது.