ஈரான் அதிபர் மரணம்! கொண்டாடும் பெண்கள்?

Filed under: உலகம் |

நேற்று ஹெலிகாப்டரில் ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹீம் ரைசி பயணம் செய்தார். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தால் துணை அதிபர் முகமது முக்தர் இன்று அதிபராக பதவியேற்று கொண்டார். ஈரான் நாட்டின் அதிபர் மரணத்தை அந்நாட்டு பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் நாட்டு அதிபர் சர்வாதிகாரி போலவும் பழமைவாதியாகவும் நடந்து கொண்டார். அவரது மரணத்திற்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்க மாட்டோம் என்று இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் பேட்டி அளித்திருக்கிறார். ஈரான் நாட்டின் பெண்களுக்காக பல உரிமைகள் இப்ராஹீம் ஆட்சியில் பறிக்கப்பட்டதாகவும் பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்களில் சிலர் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.