ஈவு இருக்கமின்றி கண்மூடித்தனமாக தெருவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலியர்கள் மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காசாவில் பாலஸ்தீனிய அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக இருக்கும் நிலையில் அங்கு பசியின் கொடுமை காரணமாக உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் படை உணவுக்காக காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் இதில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.