உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Filed under: உலகம் |

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இந்த வைரஸால் அமெரிக்காவில் 30 லட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மேல் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனம் தக்க சமயத்தில் எச்சரிக்கவில்லை என்றும் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் உள்ளது என்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை டிரம்ப் நிறுத்தினர். அந்த அமைப்பிலிருந்து வெளியேற போவதாக அறிவித்திருந்தார்.

தற்போது உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து முறைப்படி அமெரிக்கா விலக்கி கொள்கிறது என ஜனநாயகக் கட்சியின் செனட்டர் பாப் மெனண்டெஸ் அவருடைய ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.