உதயநிதியின் “மாமன்னன்”!

Filed under: சினிமா |

மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி நடிக்கும் “மாமன்னன்” திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன. இப்போது “மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படத்தைப் பற்றிய ஒரு முக்கியமான தகவல் சமீபத்தில் வெளியானது. படத்தில் “மாமன்னன்” என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் மகனாகதான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம். இங்கு 20 நாட்களுக்கு மேல் நடக்கும் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் நிறைவுறும் என சொல்லப்படுகிறது.