லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போவது கைதி படத்தின் இரண்டாம் பாகமா?

Filed under: சினிமா |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டு உள்ளார்.

இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவர் கைதி படத்தின் இரண்டாம் பாகம் இயக்க உள்ளார் என தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும், கைதி இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார் எனவும் இதனை பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.