உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதி!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னகப்பட்டு குளத்தில், மூழ்கிய முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல்கள் கூறியதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.