கலைவாணர் அரங்கில் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது!

Filed under: தமிழகம் |

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை பற்றி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், செப்டம்பர் 14ஆம் தேதி காலை 10மணிக்கு கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் கூட்டத் தொடர் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.