அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமைப் பிரச்னையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ் சுக்கு சாதாகமாக இருந்தது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது ஓபிஎஸ் பக்கம் தாவ தொடங்கியுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு 6 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ்ஸும் நிறைய எம்எல்ஏக்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறினார். 25 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தரவிருப்பதாக கோவை செல்வராஜ் புதிதாக ஒரு தகவலை கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியை மக்களிடம் அறிமுகப்படுத்தியது ஓபிஎஸ்தான். அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்தி கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு பணம் பதவி இரண்டும்தான் தேவை. ஓ.பன்னீர் செல்வம் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் கட்சியை தொட முடியாது. துரோகம் செய்து பழக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி விரைவில் காணாமல் போய்விடுவார். கோவை மாநகரில் செப்டம்பர் மாதம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இக்கூட்டத்தில் அந்த 25 எம்எல்ஏக்களும் யார் என்பது தெரியவரும். செயல்வீரர்கள் கூட்ட மேடையில் அந்த 25 எம்எல்ஏக்களும் மேடை ஏற்றப்படுவார்கள்” என்றார்.