நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,
‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு.
பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா சந்தேகத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், இது ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளதற்காகத்தான் திருமாவளவன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், நடிகர் ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை என்ற முடிவு நல்ல முடிவு. வறட்டு கவுரவம் பார்க்காமல் உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்மையை வெளிப்படையாக கூறியதை நான் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.