தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர்கான இருசக்கர வாகனம், மாற்றுத் திறனாளிக்கான மூன்று சக்கர சைக்கிள், போன்றவற்றை அமைச்சர் காமராஜ் வழங்கியுள்ளார்.

பின்பு நிருபர்களிடம் பேசினார்: அதில் கூறியது, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 512 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24,70,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.