என்னை யாரும் அவமதிக்கவில்லை!

Filed under: அரசியல் |

“என்னை யாரும் அவமதிக்கவில்லை” என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அவர் சமீபத்தில் சென்ற போது அவரை அவமதித்ததாக கூறப்பட்டது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதற்கு விளக்கமளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் “சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை, நான் அவமதிக்கப்பட்டதால் வெளிவந்த தகவல் பொய்யானது. படியில் உட்காரக்கூடாது என்று ஒருவர் சொன்னார். அப்புறம் அவர் போய்விட்டார்” என்று கூறியுள்ளார்.