திமுக ஆட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய போது வெளியான முதல் அறிவிப்புகளில் ஒன்றான மகளிருக்கு பேருந்துகளில் இலவசம்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், பேசும்போது “மகளிர் இலவச பேருந்தால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது. இருப்பினும் உங்கள் பகுதிக்கான பேருந்து குறித்த வாய்ப்புகளை கேட்டு விண்ணப்பம் அளித்தால் அந்த பகுதிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரங்களில் மட்டுமே மகளிர்களுக்கு இலவச பேருந்து என்ற சலுகை கிடைத்து வருகிறது. பல கிராமங்களில் பேருந்துகளே இல்லை என்பதால் இலவச சலுகையை மகளிர் அனுபவிக்க முடியாமல் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
Related posts:
புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்
திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர...
முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஈபிஎஸ்!
துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் நிறைய ஓணம் திருநாள் வழி காட்டட்டும் - மருத்துவர் இராமதாசு



