எலான் மஸ்க்கின் அறிவிப்பு!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

எலான் மஸ்க் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயை காசா மற்றும் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நடந்து வருகிறது. இப்போரால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். எலான் மாஸ் கொடுக்க போகும் பணத்தை வைத்து காசா மற்றும் இஸ்ரேல் பகுதியில் உள்ள பள்ளிகள் மருத்துவமனை ஆகியவற்றுக்கு செலவழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிணைக் கைதிகளை விடுவிக்க நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.