ஏஒன் தாழில்நுட்பத்தால் 4000 பேர் வேலை இழப்பு!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

ஏஒன் தொழில்நுட்பம் மற்ற தொழில் நுட்பத்தை விடவும் உலகளவில் மிக அதிகமாக வளர்ந்து வருகிறது.

இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தை 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மே மாதம் உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் வேலை இழந்த நிலையில் அதில் 4000 பேர் ஏஒன் தொழில்நுட்பத்தால் மட்டுமே வேலை இழந்தனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் இன்னும் அதிகமான வேலை வாய்ப்புகள் குறையக்கூடும் என்று வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர். சாட்ஜிபிடி, பர்ட் உள்பட ஒரு சில ஏஒன் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் தளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருவது மனித வேலைவாய்ப்புகளை மிகப்பெரியளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.