சிறுகுறு நிறுவனங்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி சிறுகுறு நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இன்று தமிழ்நாடு சிறு குறு தொழில் சங்கத்தின் துணைத்தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்களது செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மின்வெட்டால் தொழில் முனைவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களை கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்து. மின் கட்டண உயர்வுக்கு பிரச்சனைக்கு தொடக்கத்திலேயே தீர்வு கண்டிருக்க வேண்டும். மதிய மாநில அரசுகள் தொழில் முனைவோரின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.