ஏற்காடு மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதி புகழ்பெற்ற சுற்றுலாதளமாகவும் இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையில் பல சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கும் பயணித்து வருகின்றனர். இன்று வழக்கமாக ஏற்காடு வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அருகே இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த 45 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.