“காந்தாரா” திரைப்படம் இந்தியளவில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் “காந்தாரா” திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. “கேஜிஎப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான “காந்தாரா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் பெற்றுள்ளது. மொழி தாண்டியும் சென்னை உட்பட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. “பொன்னியின் செல்வனு”க்கு பிறகு ரசிகர்கள் ஆவலாகப் பார்க்கும் படமாக “காந்தாரா” அமைந்துள்ளது. இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் “ஜெய்பீம்“ திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், கேஜிஎப் திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.