நேற்று நடைபெற்ற 31வது ஐபிஎல் கிரிக்கெட்டில் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிக் கொண்டன. இதில் பெங்களூரு அணி மேலும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. லக்னோ மிகவும் போராடிய நிலையில் தோல்வியை தழுவி உள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தன. கேப்டன் டுபிளஸ்சிஸ் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டுபிளஸ்சிஸ் தேர்வு செய்யப்பட்டார் இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.