ஐஸ்வர்யா ராஜேஷ் “புஷ்பா” திரைப்படம் குறித்து சர்ச்சையான கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா.” படத்தில் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் மூலம் அவர் பல மொழிகளிலும் பிரபலமானார். சமீபத்தில் புஷ்பா படம் பற்றியும், ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் குறித்தும் ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுபற்றி விளக்கமளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் “சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கு தெலுங்கி சினிமா பிடிக்கும். புஷ்பா படத்தின் ‘ஸ்ரீவள்ளி’ கதாப்பாத்திரத்தை ரொம்ப பிடித்திருந்தது என கூறியிருந்தேன். ஆனால் அந்த கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நான் ராஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன் என கூறியதாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நடிகை ராஷ்மிகா “நீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்தது. நமக்குள் விளக்கம் அளித்துக்கொள்ள தேவையில்லை. உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உள்ளது” என்று பதிலளித்துள்ளார்.