ஒன்றரைக் கோடி முட்டைகள் கத்தாருக்கு எற்றுமதி!

Filed under: உலகம்,தமிழகம் |

நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால் பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து கத்தாருக்கு 1கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. உலகளவில் முட்டை உற்பத்தியில் துருக்கி முன்னணியில் உள்ள நிலையில், தற்போது அங்கு ஓரு பெட்டி முட்டை 36 டாலர்களாக உயர்ந்துள்ளதையடுத்து, நாமக்கல் முட்டைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.