ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் ஊழியர்களை நியமனம் செய்ய போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த அறிவிப்பிற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை கும்பகோணம் உட்பட பல்வேறு வழித்தடத்தில் ஓட்டுநர்களை நியமனம் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்த ஓட்டுநர்கள் 400 பேர்களை நியமனம் செய்வதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு போக்குவரத்து சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பின்னர் பணி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமனம் செய்வதற்கான டெண்டர் வெளியானதை அடுத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.