தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும்
தமிழகத்தில் 31வது தென்மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான 31-வது தென் மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தற்போது ஒரே மேடையில் இருவரும் பங்கேற்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.