ஓடிடியில் ரிலீசாகும் “சைரன்”!

Filed under: சினிமா |

ஜெயம் ரவி “சைரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” படத்திலும் நடித்து வருகிறார். “சைரன்” படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்த படம் இப்போது இந்த படம் தயாராகி வந்துள்ளது. “சைரன்” படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 26ம் தேதி ஜி தமிழில் இத்திரைப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.