ஓபிஎஸ் குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஓட்டு போட சென்று பாதி வழியிலேயே திரும்பி சென்றார்.
இந்திய குடியரசு தலைவருக்கான இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும் அரசு தலைமையகம் விரைந்தார். ஆனால் கொரோனா தொற்று உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, போர் நினைவு சின்னம் வரை சென்ற ஓபிஎஸ் வாக்களிக்காமலேயே திரும்பி சென்றார்.