ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியில் ஒற்றைத் தலைமை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இத்தீர்மானத்தை எதிர்த்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிபை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டடியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து 4 பேரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி நீதிபதிகள் கூறியதாவது: “அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால, தீர்மானத்திற்குத் தடைவிதிக்க முடியாது என்றும், தடைவிதித்தால், கட்சியில் செயல்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்து இதைக் கொண்டாடி வருகின்றனர்.