செமஸ்டர் தேர்வு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அத்தேர்வில் சாதி பற்றிய கேள்வி கேட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை. எனவே, தமிழக அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று கண்டத்தை தெரிவித்துள்ளார்.