திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் ஒருவேளை மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. வேட்பு மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை, தகவல்கள் மறைக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்த நிலையில் நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கவும் மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Related posts:
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ப மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி மாவட்டம் தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்....!
ஸ்டாலின் மீது வழக்கு பிரசாரத்தில் கருப்பு கொடி.. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!!



