“ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு”: அதிமுக %3D உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Filed under: அரசியல் |

“ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு”: அதிமுக %3D உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி உடன் பிஜேபி, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது, இதில் பாமகவுக்கு 23 ,பாஜகவுக்கு 20 என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுடன் மட்டுமே இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவுக்கு 17 தொகுதிகள் ,ஒரு எம்.பி. சீட்டு என்ற அதிமுகவில் முடிவுக்கு தேமுதிக இணங்கவில்லை.இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் 2வது நாளாக இன்றும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர் .

ஏற்கனவே முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஆகியோர் போட்டியிடவுள்ள 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அதிமுகவால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அதிமுக தரப்பிலிருந்து களம் காண உள்ள அடுத்த 20 வேட்பாளர்கள் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப்-க்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி அண்ணா நகரில் – கோகுல இந்திரா, தி.நகரில் சத்யா, ஆலந்தூரில் பா.வளர்மதி,மயிலாப்பூரில் மைத்ரேயன், வேளச்சேரியில் அசோக், கம்பத்தில் ஜெயபிரதீப் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி, திருப்பத்தூர் (வேலூர்) கே.சி.வீரமணி,காரைக்குடியில் பி.ஆர்.செந்தில்நாதன்,ராமநாதபுரத்தில் முனுசாமி ஆகியோர் போட்டியிடவுள்ளார்களாம்.


பொள்ளாச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன், மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ, மதுரை வடக்கு தொகுதியில் ராஜன் செல்லப்பா, திருமங்கலத்தில் ஆர்.பி.உதயக்குமார், புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர்

சிவகங்கையில் பாஸ்கரன் அம்பலம், திருமயம் தொகுதியில் வைரமுத்து, ஆவடியில் மாஃபா பாண்டியராஜன் அத்துடன் மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின் ஆகியோர் களம்காணவுள்ளார்களாம். இதில் மயிலாப்பூர், காரைக்குடி ஆகிய பகுதிகளை பாஜக கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.