தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?- லீக் செய்த தேமுதிக நிர்வாகிகள்!

Filed under: அரசியல் |

தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?- லீக் செய்த தேமுதிக நிர்வாகிகள்!

அதிமுகவிடம் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அடுத்தடுத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அதிமுக தேமுதிகவுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. 40 தொகுதிகளில் இருந்து இறங்கிவந்துள்ள தேமுதிக 21 அல்லது 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக அதிமுகவிடம் கூறியுள்ளது. மேலும் அதற்கான உத்தேச தொகுதிகள் பட்டியலையும் வழங்கிவிட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் 12 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

குறைந்தது 15 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தும் தேமுதிக இதற்கு மேல் இறங்கிவட முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்நிலையில் தேமுதிக போட்டியிட விரும்பும் 20 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிகவின் நிர்வாகிகள் தரப்பில் இருந்து வெளியான உத்தேச பட்டியல், விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், விருதுநகர், விருதாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, மதுரை மத்தி, மேட்டூர், மயிலாடுதுறை, பண்ரூட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தொகுதிகளையே குறைவாக ஒதுக்க முடிவு செய்திருக்கும் அதிமுக அவர்கள் கேட்ட தொகுதியை வழங்குவமா என்பதில் சந்தேகம் இருப்பதாக தேமுதிக நிர்வாகிகள் முணுமுணுக்கின்றனர்.