தலைமை செயலக ஊழியர்கள் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை சட்டமன்றமாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு அக்கட்டிடத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை கட்டிடத்தை சட்டமன்றமாக மாற்றப்பட வேண்டும் என்று தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பதிலளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் சட்டப்பேரவையாக மாற்றப்படாது என்று உறுதியளித்தார்.