கோயம்புத்தூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 51 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பணியாற்றியுள்ளனார் . நகைக்கடை இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு வேலை பார்க்கும் விற்பனையாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து 90 பேருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் பின் அவர்களை சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர்.
இதனால் சுகாதாரத்துறையினர் கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.