ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அதிலிருந்து 13 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
நேற்றிரவு ஓமன் கடலில் திடீரென எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததாகவும் அந்த கப்பலில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர் உட்பட 16 பேர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஓமன் நாட்டில் கடல் பகுதியில் கவிழ்ந்த கப்பல் மூழ்கி விட்டதாகவும் இந்த கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 13 பேர் மற்றும் இலங்கை சேர்ந்த மூன்று பேர் என்ன மொத்தம் 16 ஊழியர்கள் இருந்ததாகவும் இந்த கப்பல் தலைகீழாக கவிழ்ந்து இருக்கும் நிலையில் அதில் இருந்த எண்ணெய் கசிவு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இக்கப்பலில் பணிபுரிந்த 16 ஊழியர்கள் காணாமல் போனதை அடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் துபாயிலிருந்து ஹம்ரிகா துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்தபோது ஏமன் பகுதியில் செல்லும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. கப்பல் கவிழ்ந்ததுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காணாமல் போன 13 இந்தியர்களை கண்டுபிடிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.