அயோத்தி ராமர் கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை கொடுக்கலாம் – கோவில் அறக்கட்டளை தகவல்!

Filed under: உலகம் |

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை கொடுக்கலாம் என கோவில் அறக்கட்டளையின் உறுப்பினரும், உபியில் இருக்கும் பெஜாவர் மட தலைவரான விஸ்வநாத் தீர்த்த சுவாமி தெரிவித்துள்ளார்.

இதை பற்றி பேசிய அவர் கூறியது: ஒருவர் ரூபாய் 10 அல்லது ஒரு குடும்பத்தில் இருந்து ரூபாய். 100 வரை நன்கொடை வசூலிக்கப்படும். பின்னர் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நன்கொடை கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் பூமி பூஜைக்கு ரூபாய் 300 கோடி செலவாகும். மேலும், ராமர் கோவில் சுற்றி இருக்கும் இடங்களை புதுப்பிக்க ரூபாய் 1000 கோடி வரை தேவைப்படும் தெரிவித்தார்.