முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்னும் ஒரு சில மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பி.எஸ். பேட்டியில், “அமமுகவுடன் எங்கள் அமைப்பு இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது. பிரதமரிடம் நேற்று சந்தித்தபோது அவரிடம் அரசியல் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் அமைந்துள்ளது. இபிஎஸ் குறித்த ரகசியத்தை நான் வெளியே சொல்ல முடியாது. அது தெரிய வேண்டிய நேரத்தில் தானாகவே வெளியே வரும். கொடநாடு சம்பவம் நடந்த போது நாங்கள் இபிஎஸ் உடன் இல்லை. அதனால் அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.