இளைஞர் ஒருவர் கஞ்சா விற்றதை போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த விக்னேஷ் லாரி ஓட்டுனராக இருந்தார். அவரது நண்பர் சசிகுமார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. சசிகுமார் கஞ்சா விற்றது தொடர்பாக விக்னேஷ் ரகசியமாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை சசிகுமார் அறிந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து விக்னேஷை தனியாக அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதை தலைக்கேறியவுடன் அறிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளார். அதனை அடுத்து விக்னேஷ் சடலத்தை புதைத்து விட்டு தலைமுறைவானார். சசிகுமார் மீது சந்தேகப்பட்டு போலீசார் அவரை நெருங்கிய நிலையில் அவரே சரணடைந்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.