பெட்டி, பெட்டியாக போதை பொருட்கள் பறிமுதல், கஞ்சா விற்றவரும் சிக்கினார்.

Filed under: தமிழகம் |

பெட்டி, பெட்டியாக போதை பொருட்கள் பறிமுதல், கஞ்சா விற்றவரும் சிக்கினார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதை யடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி பாண்டி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் துணையுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரி பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசரகம் பிராட்டியூர் பகுதியில் கஞ்சா விற்றதாக ஆனந்த் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.