இரண்டு நாள் தேடலுக்கு பிறகு மீனவர்கள் கடலில் வீசியெறிந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையிலிருந்து மீன்பிடி பைபர் படகில் தங்கம் கடத்திவரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சுங்கத்துறையினர் அந்த படகை சுற்றி வளைத்தனர். இதையடுத்து மீனவர்கள் அந்த தங்க கட்டிகளை கடலில் தூக்கி எறிந்ததாக கூறப்பட்டது, கடலில் தூக்கி எறியப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாள் தேடலுக்கு பிறகு தற்போது 12 கிலோ தங்க கட்டிகள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இன்றைய மதிப்பில் ஒரு கிலோ தங்க கட்டி 50 லட்சத்திற்கும் மேல் அதிகம் என்ற நிலையில் 12 கிலோ தங்க கட்டி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தங்க கட்டிகள் கடலில் இருக்கிறதா என்பது குறித்து தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.