கடுங்குளிர் காரணமாக 98 பேர் மரணம்…

Filed under: இந்தியா |

உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடுங்குளிர் காரணமாக இருதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 98 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இக்குளிரால் 25 பேர் இதய நோயால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது நிலவும் கடும் குளிரா கடந்த 5 நாட்களில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாகத் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 723 பேர் சிகிச்சைக்கு சென்றுள்ளதாகவவும் தகவல் வெளியாகிறது. கடும் குளிரிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இருதயவியல் துறை இயக்குனர் வினய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும், குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமின்றி பதின்ம வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படும் எனவும் இதனால் வெப்பம் ஏற்படுத்தித் தற்காத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.