தமிழகத்தில் கடும் குளிராக இருக்கும் என்று எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என சென்னை வானிலை மையம் விளக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடுங்குளிர் நிலவும் என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. அது தவறான தகவல், கடும் குளிர் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எதுவும் தெரிவிக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை வானிலை இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.